Primary tabs


அரும்பிய சுணங்கின்
மாசில் கற்பின் புதல்வன் தாயென
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி.” (அகம்.6)
இது, புலவிக்கண் தலைவன் புகழ்ந்தது.
“அணைமருள் இன்துயில் அம்பணைத் தடமென்றோள்
துணைமலர் எழில்நீலத் தேந்தெழின் மலருண்கண்
மணமௌவல் முகையன்ன மாவீழ்வான் நிரைவெண்பல்
மணநாறும் நறுநுதன் மாரிவீழ் இருங்கூந்தல்
அலர்முலை ஆகத்து அகன்ற அல்குல்
சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப்
பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி
இனிய சொல்லி யின்னாங்குப் பெயர்ப்ப
தினியறிந் தேனது துனியா குதலே.” கலி.14)
இது போக்கின்கண் தலைவன் புகழ்ந்தது.
“அரிபெய் சிலம்பின்” (அகம்.6)
என்பதனுள் “ஏந்தெழில் ஆகத்துப் பூந்தார் குழைய” என்பது தலைவி புலவிக்கட் புகழ்ந்தது.
“நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு” (அக்.66)
என்பதும் அது.
‘தகை’ எனப் பொதுவாகக் கூறலிற் குணத்தைக் கூறலுங் கொள்க.
“நாலா றுமாறாய்” (நாலடி.383)
எனவும்,
“நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்” (நற்.1)
எனவும் வரும்.
குற்றேவனிலையளாகிய தலைவியைத் தலைவன் புகழ்தலாலும்
பெருநாணினளாகிய தலைவி
கணவனைப் பிறரெதிர் புகழ்தலா
னும்வழுவாயிற்று. (34)
இறைச்சிப்பொரு ளிதுவெனல்
229. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே.
இது, தலைவிக்குந் தோழிக்கு முரியதொரு வழுவமைக் கின்றது.
இறைச்சியாவது உள்ள பொருள் ஒன்றனுள்ளே கொள்வதொரு
பொருளாகலானுஞ்
செவ்வன் கூறப்படாமையானுந் தலைவன் கொடுமை
கூறும்வழிப் பெரும்பாண்மை பிறத்தலானும் வழுவாயிற்று.
(இ-ள்.)
இறைச்சிதானே - கருப்பொருட்கு நேயந்தான்; பொருட்
புறத்ததுவே - கூறவேண்டுவதொரு பொருளின் புறத்தே புலப்பட்டு
அதற்கு உபகாரப்படும் பொருட்டன்மை யுடையதாம் எ-று.
“இலங்கு மருவித் திலங்கு மருவித்தே
வானி னிலங்கு மருவித்தே தானுற்ற
சூள்பேணான் பொய்த்தான் மலை.” (கலி.41)
சூளைப் பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதன்
புறத்தே இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து நீர்திகழ்வ
னென்னென இறைச்சிப்பொருள் தோன்றியவாறு காண்க. பிறவுமன்ன.
(35)
கருப்பொருளிற் பிறக்கும் பொருளுமுளவெனல்
230. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே
திறத்தியன் மருங்கின் தெரியு மோர்க்கே.
இஃது, எய்தியது இகந்துபடாமற் காத்தது.
(இ-ள்.) இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே - கருப்பொருள் பிறிதொரு பொருட்