Primary tabs


நிகழுமிடத்தாயின் தலைத்தாட் கழறு மென்பது பெறுதும், தலைத்
தாள் - தகுதிபற்றிய வழக்கு.
“பொன்னெனப் பசந்தகண் போதெழில் நலஞ்செலத்
தொன்னல மிழந்தகண் துயில்பெறல் வேண்டேன்மன்
நின்னணங் குற்றவர் நீசெய்யுங் கொடுமைகள்
என்னுழை வந்துநொந் துரையாமை பெறுகற்பின்.” (கலி.77)
இது, பரத்தையர் முன்னரின்மையின் மலிதலும் ஊடலும் நிகழ்ந்து
தலைத்தாட் கழறியது.
கழறாது கூறியது வந்துழிக் காண்க. தம்முறுவிழுமத்தைப் பரத்தையர்
தலைவிக்குக் கூறுதலாற் பரத்தையர்க்கும்,
அவர் கூறத்தான்
எளிவந்தமையின் தலைவிக்கும், இவரிங்ஙன மொழுகலின் தலைவற்கும்
வழுவமைந்தது. உம்மை இறந்தது தழீஇயிற்று.
(41)
இது பெருந்திணைக்குரியதொரு வழுவமைக்கின்றது
236. பொழுது தலைவைத்த கையறு காலை
இறந்த போலக் கிளக்குங் கிளவி
மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு
அவைநற் பொருட்கண் நிகழு மென்ப.
இது ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே,’ (தொல்.பொ.105) என்ற சிறப்புடைப் பெருந்திணையன்றிப் பெருந்திணைக் குறிப்பாய்க்
கந்தருவத்துட்பட்டு வழுவிவரும் ‘ஏறிய மடற்றிறம்’ (தொல்.பொ.51)
முதலிய நான்கினுள் ஒன்றாய் முன்னர் நிகழ்ந்த கந்தருவம் பின்னர்
வழீஇ வந்த ‘தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்’ (தொல்.பொ.51) ஆகிய பெருந்திணை வழுவமைக்கின்றது.
ஓதலுந்தூதும் ஒழிந்த பகைவயிற் பிரிவாகிய வாளாணெதிரும்
பிரிவும் முடியுடை வேந்தர்க்கும்
அவரேவலிற் பிரியும்
அரசர்க்கும் இன்றி யமையாமையின், அப்பிரிவிற் பிரிகின்றான்
‘வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்’ (தொல்.பொ.185)
என்பதனாற்
கற்புப்போல நீ இவ்
வாறொழுகியான் வருந்துணையும்
ஆற்றியிருவென ஆற்றுவித்துப் பிரிதல் இலக்கண மன்மையின்
வாளாபிரியுமன்றே; அங்ஙனம் பிரிந்துழி
அவன் கூறிய கூற்றினையே
கொண்டு ஆற்றுவிக்குந் தோழிக்கும் ஆற்றுவித்தலரிதாகலின்,
அவட்கு
அன்பின்றி நீங் கினானென்று ஆற்றாமைமிக்கு ஆண்டுப்
பெருந்திணைப்பகுதி
நிகழுமென்றுணர்க.
(இ-ள்.)
பொழுது - அந்திக்காலத்தே; கையறு காலை -‘புறஞ் செயச்
சிதைதல்’ (தொல்.மெய்ப்.18) என்னுஞ் சூத்திரத்தின் அதனினூங் கின்று எனக் கூறிய ‘கையறவுரைத்த’லென்னும் மெய்ப்பாடெய்திய