Primary tabs


மாந் தளிரேநீ
தொன்றிவ் வுலகத்துக் கேட்டு மறிதியோ
மென்றோள் நெகிழ்த்தான் தகையல்லால் யான்காணேன்
நன்றுநீ தென்று பிற;
நோயெரி யாகச் சுடினுஞ் சுழற்றியென்
ஆயித ழுள்ளே கரப்பன் கரந்தாங்கே
நோயுறு வெந்நீர் தெளிப்பிற் றலைக்கொண்டு
வேவ தளித்திவ் வுலகு;
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் சான்றீர்
நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ்
வலிதில் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு;
எனப்பாடி,
இனைந்துநொந் தழுதனள் நினைந்துநீ டுயிர்த்தனள்
எல்லையும் இரவுங் கழிந்தனவென் றெண்ணி
எல்லிரா, நல்கிய கேள்வன் இவன்மன்ற மெல்ல
மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங்,
கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழின் மார்பனைச் சார்ந்து.” (கலி.142)
இதனுள் அந்திக்காலத்தே கையற வெய்திப் பின்னர்ச் சான்றோரை
நோக்கிக் கூறுகின்றவள் புல்லாரா மாத்திரையென அவனோடு புணர்ச்சி
நிகழ்ந்தமையும் யாவருங் கேட்ப நக்கழுது அல்லலுறீஇயானெனப்
பெயரும் பெற்றியுங் கூறிப், புல்லிப் புணரப்பெறின் ஈதிகழ்ச்
சியன்றா மெனக் கூறத்தகாதன கூறலான் மடன் தன்னை
இறந்தவாறுந், தெள்ளியே மென்றதனானும் எள்ளி யிருக்குவ னென்
றதனானும் வருத்தமிறந்தவாறுங், “கோடுவாய் கூடா” என்பது முதலாகக்
“கொன்றையவன்” என்னுந்
துணையுந் தான் செய்ததனை
வியவாமையின் மருட்கை யிறந்தவாறும்,
நெய்தன் மலரன்ன
கண்ணெனத் தன்வனப்பு மிகுதி கூறலின்
மிகுதி யிறந்தவாறுங்
காண்க. எல்லிரா நல்கிய கேள்வனிவனெனவே கந்தருவத்தின்
வழுவிப் பெருந்திணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு
நிகழ்ந்தவாறுங்
காண்க. இதற்குப்
பொருளுரைக்குங்காற், கேட்பீராக இவள் நக்கு,
நக்க அப்பொழுதே யழும்,
இங்ஙனம் அழுமாறு காமத்தை
ஊழானது அகற்றலின் அஃதறுதியாக நரம்பினும் பயனின்றாயிருந்தது.
ஓஓ, இதனையுற்ற இவள்
அல்லற்பண்பைப் பாராதே அழிதக யாங்
குறுகினேம், குறுகி யாம்
இதனை முடிவு போகக்காண்பே மென்