Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
1 உயர்திணை என்மனார், மக்கட் சுட்டே;
அஃறிணை என்மனார், அவர் அல பிறவே;
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.2. ஆடூஉ அறி சொல் மகடூஉ அறி சொல்
பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி
அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே.3 ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று
ஆயிரு பாற் சொல் அஃறிணையவ்வே.4 பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்,
தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்,
இவ் என அறியும் அந்தம் தமக்கு இலவே
உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும்.5 னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல்.
6 ளஃகான் ஒற்றே மகடூஉ அறி சொல்.
7 ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்,
மாரைக் கிளவி உளப்பட மூன்றும்
நேரத்தோன்றும் பலர் அறிசொல்லே.8 ஒன்று அறி கிளவி த, ற, ட, ஊர்ந்த,
குன்றிய லுகரத்து இறுதி ஆகும்.9 அ, ஆ, வ, என வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே பலஅறி சொல்லே.10 இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய,
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம் தாமே வினை