தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   131


    62 வேற்றுமைதாமே ஏழ் என மொழிப.

    63 விளி கொள்வதன்கண் விளியோடு எட்டே.

    64 அவைதாம்,
    பெயர், ஐ, ஒடு, கு,
    இன், அது, கண், விளி என்னும் ஈற்ற.

    65 அவற்றுள்,
    எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே.

    66 பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல்,
    வினை நிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல்,
    பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல், என்று
    அன்றி அனைத்தும் பெயர்ப் பயனிலையே.

    67 பெயரின் ஆகிய தொகையுமார் உளவே;
    அவ்வும் உரிய, அப்பாலான.

    68 எவ் வயின் பெயரும் வெளிப்படத் தோன்றி
    அவ் இயல் நிலையல் செவ்விது என்ப.

    69 கூறிய முறையின் உருபு நிலை திரியாது,
    ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய' என்ப.

    70 நிலைக் கிளவி காலம் தோன்றா,
    தொழில் நிலை ஒட்டும் ஒன்று அலங்கடையே.

    71 இரண்டாகுவதே,
    ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி;
    எவ் வழி வரினும், வினையே, வினைக்குறிப்பு,
    அவ் இரு முதலின் தோன்றும்,
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:27:22(இந்திய நேரம்)