தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   130


    ஒரு சொல்.
    வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல், என்று
    ஆயிரு வகைய பல பொருள் ஒருசொல்

    53 அவற்றுள்,
    வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல்
    வேறுபடு வினையினும், இனத்தினும், சார்பினும்,
    தேறத் தோன்றும் பொருள் தெரி நிலையே.

    54 ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
    வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்,
    நினையும் காலை, கிளந்தாங்கு இயலும்.

    55 குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி.

    56 குடிமை, ஆண்மை, இளமை, மூப்பே,
    அடிமை, வன்மை, விருந்தே, குழுவே,
    பெண்மை, அரசே, மகவே, குழவி,
    தன்மை திரி பெயர், உறுப்பின் கிளவி,
    காதல், சிறப்பே, செறற்சொல், விறற்சொல் என்று
    ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ,
    அன்ன பிறவும், அவற்றொடு சிவணி,
    முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
    உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்,
    அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.

    57 காலம், உலகம், உயிரே, உடம்பே,
    பால் வரை தெய்வம், வினையே, பூதம்,
    ஞாயிறு, திங்கள், சொல், என வரூஉம்
    ஆயீர் ஐந்தொடு பிறவும் அன்ன
    ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்,
    பால் பிரிந்து இசையா, உயர்திணை மேன.

    58 நின்றாங்கு இசைத்தல் இவண் இயல்பு இன்றே.

    59 இசைத்தலும் உரிய, வேறிடத்தான.

    60 எடுத்த மொழி இனம் செப்பலும் உரித்தே.

    61 கண்ணும் தோளும் முலையும் பிறவும்
    பன்மை சுட்டிய சினை நிலைக் கிளவி
    பன்மை கூறும் கடப்பாடு இலவே-
    தம் வினைக்கு இயலும் எழுத்து அலங்கடையே.

     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:27:16(இந்திய நேரம்)