தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   129


     
    44
    ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல்
    ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது.
    45
    வியங்கோள் எண்ணுப்பெயர் திணை விரவு வரையார்.
    46
    வேறு வினைப் பொதுச் சொல் ஒரு வினை கிளவார்.
    47
    எண்ணுங்காலும் அது அதன் மரபே.
    48
    இரட்டைக் கிளவி இரட்டின் பிரிந்து இசையா.
    49
    ஒரு பெயர்ப் பொதுச் சொல் உள் பொருள் ஒழியத்
    தெரிபு வேறு கிளத்தல், தலைமையும் பன்மையும்!
    உயர்திணை மருங்கினும், அஃறிணை மருங்கினும்.
    50
    பெயரினும் தொழிலினும் பிரிபவை எல்லாம்
    மயங்கல் கூடா, வழக்கு வழிப்பட்டன.
    51
    பலவயினானும் எண்ணுத் திணை விரவுப் பெயர்
    அஃறிணை முடிபின, செய்யுளுள்ளே.
    52
    வினை வேறுபடூஉம் பல பொருள்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:27:09(இந்திய நேரம்)