Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
முறைப் பெயர் இயல.
148 சுட்டுமுதற்பெயரும் வினாவின் பெயரும்
முன் கிளந்தன்ன' என்மனார் புலவர்.149 அளபெடைப் பெயரே அளபெடை இயல
கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர்,
விளம்பிய நெறிய விளிக்குங் காலை.150 புள்ளியும் உயிரும் இறுதி ஆகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்.151 விளி நிலை பெறூஉம் காலம் தோன்றின்,
தெளி நிலை உடைய, ஏகாரம் வரலே.152 உள எனப்பட்ட எல்லாப் பெயரும்,
அளபு இறந்தனவே, விளிக்கும் காலை,
சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான.153 `அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்
அம் முறைப்பெயரொடு சிவணாதுஆயினும்,
விளியொடு கொள்ப' தெளியுமோரே.154 த, ந, நு, எ ,என அவை முதல் ஆகித்
தன்மை குறித்த ன, ர, ள, என் இறுதியும்,
அன்ன பிறவும், பெயர் நிலை வரினே,
இன்மை வேண்டும், விளியொடு கொளலே.