Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.
156 பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்.157 தெரிபு வேறு நிலையலும், குறிப்பின் தோன்றலும்,
இரு பாற்று' என்ப 'பொருண்மை நிலையே'.158 சொல் எனப்படுப பெயரே, வினை, என்று
ஆயிரண்டு' என்ப, அறிந்திசினோரே.159 இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும்,
அவற்று வழி மருங்கின் தோன்றும்' என்ப .160 அவற்றுள்,
பெயர் எனப்படுபவை தெரியும் காலை,
உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
அம்மூ உருபின, தோன்றலாறே.161 இரு திணைப் பிரிந்த ஐம் பால் கிளவிக்கும்
உரியவை உரிய, பெயர்வயினான .162 அவ்வழி,
அவன், இவன், உவன், என வரூஉம் பெயரும்;
அவள், இவள், உவள், என வரூஉம் பெயரும்;
அவர், இவர், உவர், என வரூஉம் பெயரும்;
யான், யாம், நாம், என வரூஉம் பெயரும்;
யாவன், யாவள், யாவர், என்னும்
ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்