தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   144


    166 அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
    பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
    என்ன பெயரும் அத் திணையவ்வே .

    167 அது, இது, உது, என வரூஉம் பெயரும்;
    அவை முதல் ஆகிய ஆய்தப் பெயரும்;
    அவை, இவை, உவை, என வரூஉம் பெயரும்;
    அவை முதல் ஆகிய வகரப் பெயரும்;
    `யாது, யா, யாவை,' என்னும் பெயரும்;
    ஆவயின் மூன்றொடு அப் பதினைந்தும்
    பால் அறி வந்த அஃறிணைப் பெயரே.

    168 பல்ல, பல, சில, என்னும் பெயரும்,
    உள்ள, இல்ல, என்னும் பெயரும்,
    வினைப் பெயர்க் கிளவியும், பண்பு கொள் பெயரும்,
    'இனைத்து' எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்,
    ஒப்பின் ஆகிய பெயர்நிலை உளப்பட,
    அப் பால் ஒன்பதும் அவற்று ஓரன்ன.

    169 கள்ளொடு சிவணும் அவ் இயற்பெயரே,
    கொள் வழி உடைய, பல அறி சொற்கே.

    170 அன்ன பிறவும் அஃறிணை மருங்கின்
    பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
    என்ன பெயரும் அத் திணையவ்வே.

    171 தெரிநிலை உடைய, அஃறிணை இயற்பெயர்
    ஒருமையும் பன்மையும், வினையொடு வரினே .

    172 இரு திணைச்
     
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:28:36(இந்திய நேரம்)