Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
சொற்கும் ஓரன்ன உரிமையின்,
திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்,
நினையும் காலை, தம்தம் மரபின்
வினையொடு அல்லது பால் தெரிபு இலவே.173 நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின்
உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே,
அன்ன மரபின் வினைவயினான.174 இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயரே,
முறைப்பெயர்க் கிளவி, தாமே, தானே,
எல்லாம், நீயிர், நீ, எனக் கிளந்து
சொல்லிய அல்ல பிறவும், ஆஅங்கு
அன்னவை தோன்றின், அவற்றொடும் கொளலே!175 அவற்றுள்,
நான்கே இயற்பெயர்; நான்கே சினைப்பெயர்;
நான்கு என மொழிமனார், சினைமுதற்பெயரே;
முறைப்பெயர்க் கிளவி இரண்டு ஆகும்மே;
ஏனைப் பெயரே தம்தம் மரபின.176 அவைதாம்,
பெண்மை இயற்பெயர், ஆண்மை இயற்பெயர்,
பன்மை இயற்பெயர், ஒருமை இயற்பெயர், என்று
அந் நான்கு என்ப இயற்பெயர் நிலையே
பெண்மைச் சினைப்பெயர், ஆண்மைச் சினைப்பெயர்,
பன்மைச் சினைப்பெயர், ஒருமைச் சினைப்பெயர் என்று
அந்நான்