தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   146


    என்ப 'சினைப்பெயர் நிலையே'.

    178 பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
    ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
    பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே,
    ஒருமை சுட்டிய சினைமுதற்பெயர், என்று
    அந் நான்கு' என்ப'சினைமுதற்பெயரே'.

    179 பெண்மை முறைப்பெயர், ஆண்மை முறைப்பெயர், என்று
    ஆயிரண்டு' என்ப-'முறைப்பெயர் நிலையே'.

    180 பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே.

    181 ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே .

    182 பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றே, பலவே, ஒருவர், என்னும்
    என்று இப் பாற்கும் ஓரன்னவ்வே.

    183 ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
    ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.

    184 தாம்' என் கிளவி பன்மைக்கு உரித்தே.

    185 தான்' என் கிளவி ஒருமைக்கு உரித்தே.

    186 எல்லாம்' என்னும் பெயர்நிலைக் கிளவி
    பல்வழி நுதலிய நிலைத்து ஆகும்மே.

    187 தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது,
      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:28:50(இந்திய நேரம்)