Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
உயர்திணை மருங்கின், ஆக்கம் இல்லை.
188 நீயிர், நீ' என வரூஉம் கிளவி
பால் தெரிபு இலவே; உடன்மொழிப் பொருள.189 அவற்றுள்,
`நீ' என் கிளவி ஒருமைக்கு உரித்தே .190 ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.
191 ஒருவர்' என்னும் பெயர்நிலைக் கிளவி
இரு பாற்கும் உரித்தே, தெரியும் காலை .192 தன்மை கட்டின், பன்மை ஏற்கும்.
193 இன்ன பெயரே இவை எனல் வேண்டின்,
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்!194 மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
மகடூஉ இயற்கை, தொழில்வயினான.195 ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே;
ஆயிடன் அறிதல், செய்யுளுள்ளே!196 இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா;
நிலத்துவழி மருங்கின் தோன்றலான.197 திணையொடு பழகிய பெயர் அலங்கடையே.