தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   148


    வினை' எனப்படுவது வேற்றுமை கொள்ளாது,
    நினையும் காலைக், காலமொடு தோன்றும்.

    199 காலம்தாமே மூன்று' என மொழிப.

    200 இறப்பின், நிகழ்வின், எதிர்வின், என்றா
    அம் முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
    மெய்ந் நிலை உடைய, தோன்றலாறே.

    201 குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
    காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்,
    உயர்திணைக்கு உரிமையும், அஃறிணைக்கு உரிமையும்,
    ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும்,
    அம் மூஉருபின, தோன்றலாறே.

    202 அவைதாம்,
    அம், ஆம், எம், ஏம், என்னும் கிளவியும்,
    உம்மொடு வரூஉம் க, ட, த, ற, என்னும்
    அந் நாற் கிளவியொடு ஆயெண் கிளவியும்
    பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே.

    203 க, ட, த, ற, என்னும்
    அந் நான்கு ஊர்ந்த குன்றியலுகரமொடு,
    என், ஏன், அல், என வரூஉம் ஏழும்
    தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே.

    204 அவற்றுள்,
    "செய்கு" என் கிளவி வினையொடு முடியினும்,
    அவ் இயல் திரியாது' என்மனார் புலவர்.

    205 அன், ஆன், அள், ஆள், என்னும் நான்கும்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:29:01(இந்திய நேரம்)