தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   149


    ஒருவர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

    206 அர், ஆர், ப, என வரூஉம் மூன்றும்
    பல்லோர் மருங்கின் படர்க்கைச் சொல்லே.

    207 மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை;
    காலக் கிளவியொடு முடியும் என்ப.

    208 பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த
    அந் நால் ஐந்தும் மூன்று தலை இட்ட
    முன்னுறக் கிளந்த உயர்திணையவ்வே.

    209 அவற்றுள்,
    பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி
    எண் இயல் மருங்கின் திரிபவை உளவே.

    210 யாஅர் என்னும் வினாவின் கிளவி
    அத் திணை மருங்கின் முப் பாற்கும் உரித்தே.

    211 பால் அறி மரபின் அம் மூஈற்றும்
    ஆ ஓ ஆகும், செய்யுளுள்ளே.

    212 ஆய் என் கிளவி அவற்றொடு கொள்ளும்.

    213 அதுச் சொல் வேற்றுமை உடைமையானும்,
    'கண்' என் வேற்றுமை நிலத்தினானும்,
    ஒப்பினானும், பண்பினானும், என்று
    அப் பால் காலம் குறிப்பொடு தோன்றும்.

    214 அன்மையின், இன்மையின், உண்மையின், வன்மையின்,
    அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
    என்ன கிளவியும் குறிப்பே காலம்.
     
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:29:07(இந்திய நேரம்)