தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   157


    283 எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும்,
    தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே.

    284 எஞ்சு பொருட் கிளவி செஞ்சொல்ஆயின்,
    பிற்படக் கிளவார், முற்படக் கிளத்தல்!.

    285 முற்றிய உம்மை தொகைச்சொல் மருங்கின்,
    எச்சக் கிளவி உரித்தும் ஆகும்.

    286 'ஈற்று நின்று இசைக்கும் ஏ' என் இறுதி,
    கூற்றுவயின், ஓர் அளபு ஆகலும் உரித்தே.

    287 உம்மை எண்ணும், 'என' என் எண்ணும்,
    தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே.

    288 'எண் ஏகாரம் இடையிட்டுக் கொளினும்,
    எண்ணுக் குறித்து இயலும்' என்மனார் புலவர்.

    289 'உம்மை தொக்க எனா' என் கிளவியும்,
    'ஆ ஈறு ஆகிய என்று' என் கிளவியும்,
    ஆயிரு கிளவியும் எண்ணு வழிபட்டன.

    290 அவற்றின் வரூஉம்ம எண்ணின் இறுதியும்,
    பெயர்க்கு உரி மரபின் செவ்வெண் இறுதியும்,
    ஏயின் ஆகிய எண்ணின் இறுதியும்,
    யாவயின் வரினும், தொகை இன்று இயலா.

    291 உம்மை எண்ணின் உருபு தொகல் வரையார்

    292 உம் உந்து ஆகும் இடனுமார் உண்டே.

    293 வினையொடு நிலையினும் எண்ணு நிலை திரியா;
    நினையல் வேண்டும், அவற்று அவற்று இயல்பே.

    294 என்றும், எனவும், ஒடுவும், தோன்றி
    ஒன்று வழி உடையன, எண்ணினுள் பிரிந்தே.

    295 அவ் அச் சொல்லிற்கு அவை அவை பொருள் என
      

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:29:52(இந்திய நேரம்)