தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   158


    மெய் பெறக் கிளந்த இயல ஆயினும்,
    வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
    திரிந்து வேறு படினும், தெரிந்தனர் கொளலே!.

    296 கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும்,
    கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே!.
    உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
    இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப்
    பெயரினும் வினையினும் மெய் தடுமாறி,
    ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்,
    பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்,
    பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தித்
    தத்தம் மரபின் சென்று நிலை மருங்கின்,
    எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல்!

    298 வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா;
    வெளிப்பட வாரா உரிச்சொல் மேன.

    299 அவைதாம்,
    'உறு, தவ, நனி, என வரூஉம் மூன்றும்,
    மிகுதி செய்யும் பொருள' என்ப.

    300 உரு உட்கு ஆகும்; புரை உயர்பு ஆகும்.

    301 குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே.

    302 செல்லல், இன்னல், இன்னாமையே.

    303 மல்லன் வளனே; ஏ பெற்று ஆகும்.

    305 உகப்பே உயர்தல்; உவப்பே உவகை.

    306 பயப்பே பயன் ஆம்.

    307 பசப்பு நிறன் ஆகும்.

    308 இயைபே புணர்ச்சி.

    309 இசைப்பு இசை ஆகும்.

    310 அலமரல், தெருமரல், ஆயிரண்டும் சுழற்சி.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:29:57(இந்திய நேரம்)