தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   171


    கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
    முற்படக் கிளந்த எழு திணை' என்ப

    2 அவற்றுள்,
    நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழியப்
    படு திரை வையம் பாத்திய பண்பே

    3 முதல், கரு, உரிப்பொருள், என்ற மூன்றே,
    நுவலுங் காலை, முறை சிறந்தனவே;
    பாடலுள் பயின்றவை நாடும் காலை

    4 'முதல் எனப்படுவது நிலம், பொழுது, இரண்டின்
    இயல்பு' என மொழிப இயல்பு உணர்ந்தோரே

    5 மாயோன் மேய காடு உறை உலகமும்,
    சேயோன் மேய மை வரை உலகமும்,
    வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
    வருணன் மேய பெரு மணல் உலகமும்,
    முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
    சொல்லிய முறையான் சொல்லவும்படுமே

    6 காரும் மாலையும்-முல்லை 'குறிஞ்சி,
    கூதிர், யாமம்' என்மனார் புலவர்

    8 'பனி எதிர் பருவமும் உரித்து' என மொழிப

    9 வைகறை, விடியல்,- மருதம்

    10 எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்

    11 நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
    முடிவு நிலை மருங்கின்
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:31:11(இந்திய நேரம்)