தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   205


    எதிர்வினும் வழிகொள,
    நல்லவை உரைத்தலும், அல்லவை கடிதலும்,
    செவிலிக்கு உரிய ஆகும் என்ப.

    152 சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய.

    153 இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்,
    கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின்.

    154 உணர்ப்பு வரை இறப்பினும், செய் குறி பிழைப்பினும்,
    புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய.

    155 புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்,
    சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய.

    156 பரத்தை மறுத்தல் வேண்டியும், கிழத்தி
    மடத் தகு கிழமை உடைமையானும்,
    'அன்பிலை! கொடியை!' என்றலும் உரியள்.

    157 அவன் குறிப்பு அறிதல் வேண்டியும், கிழவி
    அகன் மலி ஊடல் அகற்சிக் கண்ணும்,
    வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே.

    158 காமக் கடப்பினுள் பணிந்த கிளவி,
    காணும் காலை, கிழவோற்கு உரித்தே
    வழிபடு கிழமை அவட்கு இயலான.

    159 அருள் முந்துறத்த அன்பு பொதி கிளவி
    பொருள்பட மொழிதல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:34:29(இந்திய நேரம்)