Primary tabs


அவ்வொப்புரவுகளைச் செய்யப்பெறாது
வருந்துகின்ற இயல்பாம்.
தான் நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம். இவ்விரண்டு
பாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது
கூறப்பட்டது. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. ஒப்புரவு செய்தலான் ஒருவனுக்குப்
பொருட்கேடு வரும் என்பார் உளராயின், அக்கேடு
தன்னை
விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. தன்னைவிற்றுக்
கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே? இஃதாயின் அதுவும்
செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி. இதனான்
ஒப்புரவினால் கெடுவது கேடு அன்று என்பது கூறப்பட்டது.
அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை
நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின்
வைக்கப்பட்டது. வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர்
வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது,
அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக்
கொடுக்கும்
நீர்மையை உடைத்து. ஒழிந்த கொடைகளாவன: வறியவர்
அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது
அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. ''நீரது''
என்புழி, ''அது'' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால்
வருதலின், ''குறியெதிர்ப்பை நீரது உடைத்து'' என்றார். இதனால்
ஈகையது இலக்கணம் கூறப்பட்டது. நல்லா றெனினும் கொளல்