தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukkural

திருக்குறள்
ஓலை எண் :   76


தீது  மேலுலகம்  இல்எனினும்  ஈதலே  நன்று.  ஏற்றல் வீட்டுலகிற்கு
நல்ல  நெறி  என்பார் உளராயினும் அது தீது, ஈந்தார்க்கு அவ்வுலகு
எய்துதல்  இல்லை  என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ''எனினும்''
என்பது  இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது.
பிரிநிலை  ஏகாரத்தால்  பிற  அறங்களின்  ஈதல்  சிறந்தது  என்பது
பெற்றாம்.  நல்லது  கூறுவார் தீயதும் உடன் கூறினார். இலனென்னும்
எவ்வம்  உரையாமை  ஈதல்  குலனுடையான்  கண்ணே  உள. யான்
வறியன்  என்று  இரப்பான்  சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண்
சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும்,
இவை  இரண்டும்  உளவாவன குடிப் பிறந்தான் கண்ணே. மேல் தீது
என்றது   ஒழிதற்கும்   நன்று   என்றது   செய்தற்கும்  உரியவனை
உணர்த்தியவாறு.  இனி  இலன்  என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
என்பதற்கு, அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே
அவன்   குறிப்பறிந்து   கொடுத்தல்  எனவும்,  அதனைப்  பின்னும்
பிறனொருவன்பால்  சென்று  அவன் உரையா வகையால் கொடுத்தல்''
எனவும்,  அதனைப்  பின்னும்  பிறனொருவன்பால்  சென்று அவன்
உரையா   வகையால்   கொடுத்தல்   எனவும்,   யான் இதுபொழுது
பொருளுடையேன்    அல்லேன்    ''எனக்   கரப்பார்''   சொல்லும்
இளிவரவைச்  சொல்லாது  கொடுத்தல்  எனவும் உரைப்பாரும் உளர்.
அவர் ''ஈதல்'' என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக
உரைப்பர்.  இன்னாது  இரக்கப்  படுதல் இரந்தவர் இன்முகங் காணும்
அளவு.   இரத்தலேயன்றி   இரக்கப்படுதலும்  இனிது  அன்று,  ஒரு
பொருளை  இரந்தவர்  அது  பெற்றதனால்  இனிதாகிய அவர் முகங்
காணும்  அளவும்;  எச்ச  உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால்
தொக்கன.  இரக்கப்  படுதல் - ''இரப்பார்க்கு ஈவல்'' என்று இருத்தல்.
அதனை ''இன்னாது'' என்றது. ''எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை''
நாலடி.145   கூடுங்கொல்லோ   என்னும்  அச்சம்  நோக்கி.  எனவே
எல்லாப்   பொருளும்   ஈதல்   வேண்டும்  என்பது  பெறப்பட்டது.
ஆற்றுவார் ஆற்றல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 00:31:37(இந்திய நேரம்)