Primary tabs


பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். தவத்தான்
வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அவ்
வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான்
ஒழிப்பாரது வலிக்குப்பின். தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க
மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார்
ஆற்றல் நன்று என்பதாம். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. வறியாரது மிக்க பசியை அறன்
நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன் அதனைத் தனக்கு
உதவ வைக்கும் இடம் அவ்வறம் ஆகலான். எல்லா நன்மைகளும்
அழிய வருதலின், ''அழி பசி'' என்றார். ''அறம் நோக்கி'' என்பது
எஞ்சி நின்றது. ''அற்றார் அழிபசி தீர்த்த'' பொருள் பின் தனக்கே
வந்து உதவும் என்பதாம். பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. எஞ்ஞான்றும் பகுத்து உண்டல்
பயின்றவனை, பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல்
இல்லை. இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை அழித்து
அதனால் வரும் உடம்புகட்கும் துன்பஞ்செய்தலின், ''தீப்பிணி''
எனப்பட்டது. தனக்கு மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி
நணுகாது என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக்
கூறப்பட்டது. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். தாம் உடைய பொருளை ஈயாது
வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார்,
வறியார்க்கு
வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார்
எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!