தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1


 

..........................பொருள்புரி நூலும்
அலகை சான்ற வுலக புராணமும்
பலவகை மரபிற் பாசண் டியர்கள்
சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும்
இசையொடு சிவணிய யாழி னூலும்
நாடகப் பொருளும்....................
உப்பாற் பொருளு முட்கொண் டடக்கி
உளப்பா டுடைமை யுதயண னுரைத்தலும்
இனைத்தோ ரிளமையொ டெனைப்பல கேள்வியும்
தவத்தது பெருமையிற் றங்கின விவற்கென
மருட்கை யுற்றதன் மனம்புரிந் தருளி
எம்முடை யளவையிற் பண்புறப் பேணி
நுன்பதிப் பெயர்க்கு மளவையி னும்பியர்
நின்வழிப் படுகென மன்னவ னுரையாக்
குலங்கெழு குமரரைக் குற்றே லருளிக்
கலந்தவ ணின்ற கட்டுரைக் காலத்துத்
தென்கட லிட்டதோர் திருமணி வான்கழி
வடகட னுகத்துளை வந்துபட் டாஅங்கு
நனிசே ணிட்ட நாட்டின ராயினும்
பொறைபடு கருமம் பொய்யா தாகலிற்
சிறைபடு விதியிற் சென்றவட் குறுகி
மதியமு ஞாயிறுங் கதிதிரிந் தோடிக்
கடனிற விசும்பி னுடனின் றாங்குப்
பைந்தொடிச் சுற்றமொடு தந்தை தலைத்தாள்
ஆயத் திடையோள் பாசிழைப் பாவை
யானை மிசையோன் மாமுடிக் குருசில்
இருவரு மவ்வழிப் பருகுவனர் நிகழ
யாதனிற் சிதைந்ததிவ் வடற்பெருங் களிறென
வேழ வேட்டம் விதியின் வினாய
கதிர்முடி வேந்தன் கண்ணிய நுண்பொருட்
கெதிர்மொழி கொடீஇய வெடுத்த சென்னியன்
மன்னவன் முகத்தே மாதரு நோக்கி
உள்ளமு நிறையுந் தள்ளிடக் கலங்கி
வண்டுபடு கடாஅத்த வலிமுறை யொப்பன
பண்டுகடம் படாஅ பறையினுங் கனல்வன
விடற்கருந் தெருவினுள் விட்ட செவ்வியுட்
டுடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:01:12(இந்திய நேரம்)