தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   2


     

    மதக்களி றிரண்டுடன் மண்டி யாஅங்
    கில்வழி வந்ததம் பெருமை பீடுறத்
    தொல்வழி வயத்துத் தொடர்வினை தொடர
    வழுவில் போகமொடு வரம்பின்று நுகரும்
    உழுவ லன்பி னுள்ளந் தாங்கி
    இழையினுங் கொடியினு மிடியினும் பிணங்கித்
    தேனினும் பாலினுந் தீஞ்சுவைத் தாகிக்
    குலத்தினுங் குணத்தினுங் கூடிய வன்பினும்
    இனத்தினும் பிறவினு மிவ்வகை யிசைந்த
    அமைப்பருங் காதலு மிமைப்பினு ளடக்கி
    ஒருவயிற் போல வுள்ளழி நோக்கமொ
    டிருவயி னொத்தஃ திறந்த பின்னர்த்
    தாரணி வேந்தன் றலைத்தா ணிகழ்ந்தது
    காரண மாகக் காத றேறி
    ஓர்ப்புறு நெஞ்சந் தேர்ச்சியிற் றிருத்திப்
    பேர்த்தவன் வினவிய பெருங்களிற் றிலக்கணம்
    போர்த்தொழில் வேந்தன்முன் பொருந்தக் காட்டி
    நீல யானை நெஞ்சுபுக் கனன்போற்
    சீல விகற்பந் தெரிந்தன னுரைக்கலும்
    அதுமுன் னடக்கிய மதியறி பாகரொ
    டங்கை விதிர்த்தாங் கரசவை புகழப்
    பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
    விழுநிதி யடுத்த கொழுமென் செல்வத்துக்
    கணக்கரை வியன்கரக் கலவறை காக்கும்
    திணைத்தொழி லாளரைப் புகுத்துமி னீங்கெனப்
    புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
    நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்
    தானை மடக்கா மான மாந்தர்
    அண்ணாந் தியலா

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:01:25(இந்திய நேரம்)