தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   7


     

    போல்
    வந்திறுத் தன்றால் வலியெனக் கில்லெனக்
    கையறு குருசிலை வைகிய தெழுவென
    இலங்குசுடர் விளக்கொ டெதிர்வந் தேத்திப்
    புறங்காப் பிளையர் புரிந்தகம் படுப்ப
    எண்ணா லிலக்கணத்து நுண்ணூல் வாங்கித்
    திணைவிதி யாள ரிணையற வகுத்த
    தமனியக் கூடத்துத் தலையள வியன்ற
    மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்துச்
    சித்திர வம்பலஞ் சேர்ந்துகுடக் கோங்கிய
    அத்தம் பேரிய வணிநிலை மாடத்து
    மடையமைத் தியற்றிய மணிக்கா லமளிப்
    படையகத் தோங்கிய பல்பூஞ் சேக்கைப்
    பைத னெஞ்சத்து மையல் கொள்ளா
    எஃகொழி களிற்றின் வெய்துயிர்த் துயங்கி
    உண்டெனக் கேட்டோர் கண்டினித் தெளிகெனத்
    திருவின் செய்யோ ளுருவமெய்த் தோன்றத்
    தீட்டிரும் பலகையிற் றிருத்தித் தேவர்
    காட்டி வைத்ததோர் கட்டளை போலக்
    கலன்பிற வணிந்து காண்போர் தண்டா
    நலந்துறை போகிய நனிநா ணொடுக்கத்து
    மணிமுகிழ்த் தன்ன மாதர் மென்முலைத்
    தணிமுத் தொருகாழ் தாழ்ந்த வாகத்
    திலமர்ச் செல்வா யெயிறுவிளக் குறுக்க
    அலமரு திருமுகத் தளகத் தப்பிய
    செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்
    பண்பிற் காட்டிப் பருகுவனள் போலச்
    சிதர்மலர்த் தாமரைச் செந்தோடு கடுப்ப
    மதரரி நெடுங்கண் வேற்கடை கான்ற
    புள்ளி வெம்பனி கரந்த கள்விதன்
    காரிகை யுண்டவென் பேரிசை யாண்மை
    செறுநர் முன்னர்ச் சிறுமை யின்றிப்
    பெறுவென் கொல்லென மறுவந்து

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:02:24(இந்திய நேரம்)