Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
மயங்கி
எவ்வமிக் கவனும் புலம்ப வவ்வழிக்
குழவி ஞாயிறு குன்றிவர் வதுபோல்
மழகளிற் றெருத்தின் மைந்துகொண் டிருந்த
மன்ன குமரன் றன்னெதிர் நோக்கி
ஒழிகுபு சோர்ந்தாங் குக்கதென் னெஞ்சென
மழுகிய திருமுக மம்மரோ டிறைஞ்சித்
தருமணற் பேரிற் றமரொடு புக்குத்
திருமணி மாடத் தொருசிறை நீங்கிப்
பெருமதர் மழைக்கண் வருபனி யரக்கிக்
கிளையினும் பிரித்தவன் கேடுதலை யெய்தித்
தளையினும் பட்டவன் றனிய னென்னான்
வேழம் விலக்கிய யாழொடுஞ் செல்கெனச்
சொன்னோ னாணை முன்னர்த் தோன்றி
உரக்களி றடக்குவ தோர்த்து நின்ற
மரத்தி னியன்றகொன் மன்னவன் கண்ணெனப்
பைந்தார்த் தந்தையை நொந்த நோயள்
உள்ளகத் தெழுதரு மருளின ளாகித்
தெளிதல் செல்லா டிண்ணிறை யழிந்து
பொறியறு பாவையி னறிவறக் கலங்கிக்
காம னென்னு நாமத்தை மறைத்து
வத்தவ னென்னு நற்பெயர் கொளீஇப்
பிறைக்கோட் டியானை பிணிப்பது மன்றி
நிறைத்தாழ் பறித்தென் னெஞ்சகம் புகுந்து
கள்வன் கொண்ட வுள்ள மின்னும்
பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கித்
தீயுறு வெண்ணெயி னுருகு நெஞ்சமொடு
மறைந்தவ ணின்ற மாதரை யிறைஞ்சிய
வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி
வெய்யோ னீங்கிய வெறுமைத் தாகிக்
கையற வந்த பைதன் மாலைத்
தீர்ந்தவ ணொழிந்த திருநல் லாயம்
தேர்ந்தனர் குழீஇப் பேர்ந்தனர் வருவோர்
இணையி லொருசிறைக் கணையுளங்