தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   12


     

    செப்பின்
    வாச நறுந்திரை வகுத்துமுன் னீட்டித்
    தாமரை யங்கையிற் றான்பின் கொண்டு
    குறிப்பி னிருக்க குமர னீங்கென
    மடக்கிடன் மனமொடு மாணகர் புக்குத்
    தான்பயில் வீணை தங்கையு மொருத்தி
    காண்குறை யுடைமையிற் கவலு மாதலின்
    வல்லோர்ப் பெறாது தொல்குறை யுழத்தும்
    தாயும் யானு மெந்தை யாதலிற்
    றீதொடு வரினுந் தீர்த்தறன் கடனென
    மதியொண் காட்சி மாமுது சிவேதனை
    இதுநங் குறையா விசைத்தி சென்றென
    நல்வினை யம்பலத் திருந்த நம்பிக்கு
    வல்லிதி னக்குறை யுரைத்த பின்னர்
    அதற்கோ ருபாய மறியா திருந்தோன்
    மகட்குறை யுணர்ந்து மன்னவன் விடுத்த
    திருமணி வீணை யிசைத்தலுந் தெருமந்
    தொருநிலை காறு முள்ளே யொடுக்கி
    விழுப்பமொடு பிறந்த வீறுயர் தொல்குடி
    ஒழுக்கங் காணிய வுரைத்ததை யொன்றுகொல்
    ஒளிமேம் பட்டன னொன்னா னென்றெனை
    அளிமேம் படீஇய வெண்ணிய தொன்றுகொல்
    உள்ள மருங்கி னுவந்தது செய்தல்
    செல்வ மன்னவன் சீலங் கொல்லோ
    யாதுகொன் மற்றிவ் வேந்தல் பணியென
    நீதி மருங்கி னினைவ வவன்சூழ்ந்
    தியாதெனப் படினும் படுக விவன்பணி
    மாதரைக் காட்டுதன் மங்கல மெனக்கென
    நெஞ்சு.........................தங்கூறி
    அஞ்சொ லாயத் தன்றியான் கண்ட
    தாமரை முகத்தி தலைக்கை யாகப்
    பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள்
    நல்லிசை யார்கொ னயக்கின் றாளெனச்
    சொல்லினன் வினவுஞ் சுவடுதனக் கின்மையின்
    யாரே யாயினு மிவன்மக ளொரு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:03:27(இந்திய நேரம்)