Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
த்தியைச்
சீர்கெழு வீணை சிறப்பொடு காட்டிப்
பயிற்சி யுள்வழிப் பல்லோர் வருதலின்
அழித்து மொருநா ளன்றியான் கண்ட
கதிர்மதி முகத்தியைக் காண்டலு முண்டென
முதிர்மதிச் சூழ்ச்சியின் முற்ற நாடிச்
செய்யே னாகிச் சிறுமை நாணின்
உய்யே னாத லொருதலை யதனால்
உயிர்கெட வருவழி யொழுக்கங் கொள்ளார்
செயிரறு கேள்வி தேர்ந்துணர்ந் தோரென
வெல்லினுந் தோற்பினும் விதியென வகுத்தல்
பொருணூ லாயும் புலவோர் துணிவென
மதிவழி வலித்த மனத்த னாகி
என்னிதற் படுத்த நன்னுதன் மாதரைப்
பேரும் பெற்றியுந் தேரு மாத்திரம்
நேர்வது பொருளென நெஞ்சு வலியுறீஇச்
செறுநரைப் போலச் சிறையிற் றந்துதன்
சிறுவரைப் போலச் செய்தோன் முன்னர்த்
தவன்முறை யாயினுந் தன்மன முவப்பன
இயன்முறை யாற்றி யென்கடன் றீர்ந்த
பின்ன ராகுமென் பெயர்முறை யென்ன
ஆன்பாற் றெண்கட லமுதுற வளைஇய
தேன்பெய் மாரியிற் றிறவ தாகப்
பருகு வன்ன பயத்தொடு கெழீஇ
உருகு வன்ன வுவகைய னாகி
இறந்தன னிவனென் விளிப்பரந் துறாது
சிறந்தன னிவனெனச் செவ்வ னோக்கிக்
கடந்தலை வைக்குங் கால மிதுவென
அவன்றலை வைக்கு மாணை யேவலும்
உவந்ததை யெல்லா முரைமி னீரெனப்
பேர்ந்தனன் விடுப்பப் பெருமூ தாளன்
நேர்ந்ததை யெல்லா நெடுந்தகைக் குரைப்பத்
திருமலி யாகத்துத் தேவியர் பயந்த
நங்கைய ருள்ளு மங்கை முற்றாப்
பெதும்பை யாயத்துப் பேதையர் வருகெனப்
பளிக்கறைப் பூமியும் பந்தெறி களத்தும்