தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   15


     

    கெடுத்தோர்
    ஐயப் படூஉ மணியிற் கேற்ப
    ஒண்மையு நிறையு மோங்கிய வொளியும்
    பெண்மையும் பெருமையும் பிறவு முடைமையிற்
    பாசிழை யாயத்துப் பையென நின்ற
    வாசவ தத்தை வல்ல ளாகென
    ஊழ்முறை பொய்யாது கரும மாதலின்
    யாழ்முறைக் கரும மிவளதென் றருளி
    மற்றவ ணின்ற பொற்றொடி மகளிரைக்
    குற்றமில் குறங்கிற் கோ...வல மேற்றிக்
    கோதை மார்பிற் காதலி னொடுக்கிப்
    பந்துங் கிளியும் பசும்பொற் றூதையும்
    கந்தியன் மயிலுங் கரந்துறை பூவையும்
    கண்ணியுங் கழங்குங் கதிர்முலைக் கச்சும்
    வண்ண முற்றிலும் பவழப் பாவையும்
    தெளித்தொளி பெறீஇய பளிக்குக்கிளிக் கூடும்
    அவரவர் மேயின வவ்வயி னருளி
    அடிசில் வினையும் யாழின் றுறையும்
    கடிமலர்ச் சிப்பமுங் கரந்துறை கணக்கும்
    வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
    கற்றவை யெல்லாங் காட்டுமி னெமக்கென
    மருளி யாய மருளொடும் போக்கி
    நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு
    நியம விஞ்சன மமைமின் விரைந்தென
    ஈன்ற தாயு மென்மகட் கித்தொழில்
    மாண்ட தென்று மனத்திற் புகல
    மழலைக் கிண்கிணிக் கழலோன் பெருமகள்
    அரும்பெறற் றத்தைக் காசா னாகிப்
    போக வீணை புணர்க்கப் பெற்ற
    தேசிக குமரன் றிருவுடை யன்னென
    அடியரு மாயமு நொடிவனர் வியப்ப
    ஏனைத் தாயரு மானா தேத்த
    வத்தவர் பெருமகன் வல்ல வீணை
    தத்தை தனக்கே தக்க தாலென
    வேட்டது பகருங் கோட்டி யாகிக்
    கோட்டமின் முற்றங் குமிழ்குமிழ்த் துரைப்பப்
    பொன்னகற் கொண்ட

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:04:02(இந்திய நேரம்)