தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   16


     

    பூவும் புகையும்
    அவ்வகற் கொண்ட வவியும் பிரப்பும்
    செம்முது செவிலியர் கைபுனைந் தேத்திச்
    சந்தன நறுநீர் மண்ணுறுத் தாட்டி
    மறுவில் வெண்கோட்டு மங்கலம் பொறித்த
    பெருவெண் சீப்பிற் றிருவுற வாரிச்
    சுருண்முறை வகுத்துச் சூட்டுப் புரியுறீஇக்
    கருங்குழல் கட்டிக் கன்னிக் கூழை
    பொன்னி னாணிற் புடையெடுத் தியாத்துப்
    பதரில் செம்பொன் காயழ லுறுத்த
    கதழ்வுறு சின்னஞ் சிதறிய மருங்கிற்
    றிருநுதற் சுட்டி திகழச் சூட்டி
    முத்தக் கலனணி மொய்ப்புச் சேர்த்துப்
    பொன்செ யோலையொடு பூங்குழை நீக்கி
    மணிச்செய் கடிப்பிணை மட்டஞ் செய்து
    தேய்வுற் றமைத்த திருவெள் ளாரத்
    தேக விடுகொடி யெழிற்றோ ளெழுதிக்
    கச்சியாப் புறுத்த கால்வீங் கிளமுலை
    முத்த வள்ளியொடு மும்மணி சுடர
    மணிக்காற் பா...........கவைஇத்
    தணிப்பொற் றோரைத் தகையொளி சுடர
    மட்டங் குயின்ற மங்கல வல்குற்
    பட்டுடைத் தானைப் பைம்பூண் சுடரத்
    திருமுகை முருக்கின் விரிமலர் கடுப்பச்
    செறிமலர் படினுஞ் சீறடி நோமென
    நெறியெனப் படுத்த நிலப்பெருந் தவிசின்
    உள்ளகத் தொடு............மெல்லடி
    அரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வரங்கின்
    உழைச்சென் மகளி ருக்க மேற்றிச்
    சித்திரம் பயின்ற செம்பொ னோலை
    முத்துவாய் சூழ்ந்த பத்திக் கோடசை இச்
    சிரற்சிற கேய்ப்பச் சிப்பம் விரித்த
    கவற்றுவினைப் பவழங் கடைந்துசெய் மணிக்கை
    ஆல வட்ட நாலொருங் காடப்
    பொன்னிய லாய்வளைக் கன்னிய ரசைப்பப்
    பொத்தின் றமைந்த புனைவிற் றாகிச்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:04:14(இந்திய நேரம்)