தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   18


     

    காண்பான்
    சென்றே யாயினுஞ் சிதையி னல்லது
    நன்றொடு வாரா தொன்றறிந் தோர்க்கென
    அரச னாசா னரும்பெறற் றந்தையெனக்
    கல்லாச் சனத்தொடு பல்லோர் சொல்ல
    ..........ப்புகாஅ ரியல்புணர்ந் தோரென
    மதியோர் மொழிந்த திதுவென் றெண்ணி
    இன்னவை பிறவுந் துன்னினர் கிளந்து
    வேந்திடை யிட்ட வெஞ்சொ லாதலிற்
    சேர்ந்தோர் மாட்டுஞ் செப்ப றீதென
    உரைப்போர் நாவிற் குறுதி யின்மையின்
    நினைத்தது மிகையென நெஞ்சு வலியுறீஇ
    மனத்ததை யாக மாந்த ரடக்கலின்
    வம்ப மாக்கள் வாயெடுத் துரைக்கும்
    கம்பலை யின்மையிற் கடிநகர் தேறி
    ஆங்கன மொழுகுங் காலை யோங்கிய
    மாணிப் படிவமொடு மதிலுஞ் சேனையுள்
    ஓதிய காலத் துடன்விளை யாடித்
    தோழ மாக்க டொழுதியிற் கூடிப்
    பால குமரன் பணியி னொருநாள்
    மாலையுஞ் சாந்து மடியும் பெய்த
    கையுறைச் செப்பொடு கடிநகர்ச் சென்ற
    வயந்தக குமரனை நயந்துமுக நோக்கிப்
    பண்டியா னிவரைப் பயின்றுழி யுண்டெனக்
    கண்டறி விலீரெனக் கரந்தவன் மறுப்பக்
    ......போல..................
    இசையா மாக்கண்மு னியல்பில சொல்லி
    அன்றுதலைப் பட்ட வார்வலர் போல
    இன்றுதலை யாக வென்று மெம்வயின்
    இவரே வருகென வேயின னருளி
    மன்ன குமரன் றன்வயிற் கோடலின்
    அரும்பெறற் றோழ னாங்குவந் தொழுகிப்
    பெரும்பெற் றறையும் பேச்சின னாகி
    மாய யாக்கையொடு மதிலகத் தொடுங்கிய
    ஆய மாக்க ளவன்வயி னறிந்து
    காவ லாள ரற்ற நோக்கி
    மேவன மென்னுஞ்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:04:40(இந்திய நேரம்)