தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   19


     

    சூழ்ச்சிய ராகிப்
    பன்னாள் கழிந்த பின்னர் முன்னாள்
    எண்மெய்ப் பாட்டினு ளிரக்க மெய்ந்நிறீஇ
    ஒண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுட்
    டலையத னும்பர்த் தான்குறிக் கொண்ட
    பாவை நோக்கத் தாரணங் கெய்தி
    முற்றான் கண்ட முகஞ்செய் காரிகை
    உட்கொண் டாற்று முறுபிணி தலைஇக்
    கட்கொண் டாங்குக் களிநோய் கனற்றத்
    தீமுகத் திட்ட மெழுகிற் றேம்பியும்
    தாய்முகத் தியாத்த கன்றிற் புலம்பியும்
    உயலருந் துன்பமொ டொருவழிப் பழகிப்
    பயலை கொண்டவென் பையு ளாக்கை
    பண்டென் வண்ணம் பயின்றறி மாக்கள்
    இன்றென் வண்ண மிடைதெரிந் தெண்ணி
    நுண்ணிதி னோக்கி நோய்முத னாடிற்
    பின்னிது கரக்கும் பெற்றி யரிதென
    மலரே ருண்கண் மாதர்க் கமைந்த
    அலரவண் புதைக்கு மருமறை நாடித்
    தெரிவுறு சூழ்ச்சியு ளிருவரு மெண்ணிப்
    பிறன்பாற் பட்ட பெண்பா னாடி
    அவள்பாற் பட்ட வார்வஞ் செய்கம்
    அன்னா ளொருத்தியை யறிந்தனை வம்மெனப்
    பல்வேற் சுற்றம் பணியிற் போகி
    நகர்முழு தறிய நாணிகந் தொரீஇ
    ஒருவன் பாங்க ருளம்வைத் தொழுகும்
    அதன்மி யாரென வாங்கவன் வினவ
    இரங்குபொற் கிண்கிணி யிளையோர் நடுவண்
    அரங்கியன் மகளிர்க் காடல் வகுக்கும்
    தலைக்கோற் பெண்டிரு டவ்வை யொருமகள்
    நாடகக் கணிகை நருமதை யென்னும்
    பாவை யாகுமிப் பழிபடு துணையென
    ஒருநூற் றொருகழஞ் சுரைகண் டெண்ணிய
    கனபொன் மாசை காண வேந்தி
    மன்றமு மறுகுங் கம்பலை கழும
    வனப்புமுத லாக வழிவர வமைந்து
    குணத்துமுறை வகையிற் கோல மெய்தி
    வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை யன்றிக்
    காணி கொண்டுங் கடனறிந் தெண்ணிய
    ஒன்றுமுத லாக வோரெட் டிறுத்த
    ஆயிரங் காறு மாத்த

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:04:52(இந்திய நேரம்)