தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   246


     

    யொடு போயின னுதயணன்
    இல்லெனக் கெழுபகை யிம்மையி னினியென
    மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
    ஆற்றன் மகிழ்ந்த வந்நிலை யொற்றி
    மகத மன்னனொடு மகட்கிளை யாகித்
    தொகைகொண்டீண்டியவன் றொல்படை தழீஇ
    ஆதித் துணிவுடை நீதியிற் கரந்த
    தம்பியர் கூட வெம்பிய வெகுட்சியின்
    ஒருங்கா மாந்த ருள்ள மஞ்சப்
    பாடுபெயர்ந் திடிக்கு மேடகம் போல
    அகன்றுபெயர்ந் தழிக்கு மரும்பெறற் சூழ்ச்சி
    நவின்ற தோழனொடு பயம்பட வலித்து
    மதியுடை யமைச்சர் மனந்தெளி வுறீஇப்
    புதிதிற் கொண்ட பூக்கவின் வேழம்
    பணிசெயப் பிணிக்கும் பாகர் போல
    நீதி யாள ராதி யாகிய
    திறத்திற் காட்டவு மறத்தகை யழுங்கி
    முன்னுப காரத்து நன்னயம் பேணித்
    தன்னுயிர் கொடுக்குந் தவமுது தாயும்
    விறப்பினிற் பெருகியும் வறப்பினிற் சுருங்கியும்
    உறுதி நோக்கி யுயிர்புரை காதலோ
    டாழ்விடத் துதவு மரும்புணை போலத்
    தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
    உள்ள வாற்ற லுறுபுகழ் யூகியும்
    அள்ளற்றாமரை யகவித ழன்ன
    அரிபரந் தகன்ற வம்மலர் நெடுங்கட்
    டெரிமலர்க் கோதைத் தேவியு மின்றித்
    தருமமு மருத்தமுங் காமமு மிழந்தே
    இருநில மருங்கி னிறைமை தாங்கி
    வாழ்தலி னினிதே யாழ்தலென் றழிந்தே
    உரக்கவின் றேய விரக்கமொ டரற்றவும்
    கைவரை நில்லாக் கையறு கவற்சிகண்
    டின்மொழி விச்சை யிலாமய னென்னும்
    ஆளவி நெஞ்சத் தந்தண னிருந்த
    காள வனமும் வெந்தீப் புக்கெனக்
    காவலன் றன்னையுஞ் சாவற லுறீஇ
    மயக்க நெஞ்சமொடு மனம்வலித் திருந்துழி
    இசைச்சன் கூறுவ னீங்கிது கேட்கென
    விச்சையின் முடியா விழுவினை யில்லெனல்
    பொ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:51:41(இந்திய நேரம்)