Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ய்ச்சொ லென்பர் புன்மை யோரே
அற்ற தாக லிற்றுங் கூறுவென்
கற்றதுங் கேட்டதுங் கண்ணா மாந்தர்க்
கொற்கிடத் துதவு முறுவலி யாவது
பொய்ப்பது போலு நம்முதற் றாகப்
பற்றொடு பழகி யற்பழ லழுந்தி
முடிவது நம்மைக் கடிவோ ரில்லை
இல்லை யாதலிற் சொல்லுவ லின்னும்
முடியாக் கரும மாயினு முடியும்
வாயின் முற்றித்து வயங்கா தாயினும்
சாவினும் பழியார் சால்புடை யோரென
மல்லற்றானை மறங்கெழு மன்னவன்
செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
இம்மை யாக்கையி னியல்பின ளாகத்
தன்மையிற் றரூஉந் தாழாப் பெருவினை
உட்குடை விச்சை யொன்றுண் டதனைக்
கற்றுநனி நவின்ற கடனறி யந்தணன்
இருந்தினி துறையு மிராச கிரியெனும்
பொருந்தரு வியனகர்ப் புக்கவற் குறுகி
ஆற்றுளி வழிபா டாற்றி யமைச்சனொடு
பூக்குழை மாதரை மீட்டனங் கொண்டு
பெறற்கரு விச்சையுங் கற்று நாமெனத்
திறற்படு கிளவி தெரிந்தவ னுரைப்ப
விறற்போ ருதயணன் விரும்புபு விதும்பி
என்னே யன்னவு முளவோ வென்றலின்
வேட்டதன் வழியே பாற்பட நாடி
ஆதி வேதத் தகவயிற் பெரியோர்
ஓதிய வுண்டென வுணரக்கூற
இன்னே போது மேகுமின் விரைந்தெனப்
பள்ளம் படரும் பன்னீர்போலவன்
உள்ளம் படர்வழி யுவப்பக் காட்டிக்
கணம்புரி பெரும்படைக் காவ னீக்கிக்
குணம்புரி தோழர் கொண்டனர் போதர
ஆற்றலும் விச்சையு மறிவு மமைந்தோர்
நூற்றுவர் முற்றி வேற்றுந ராகென
வெண்ணூற் பூந்துகில் வண்ணங் கொளீஇ
நீலக் கட்டியு மரகதத் தகவையும்
பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
கோல மாகக் கொண்டுகூட் டமைத்துப்
பிடித்துருக் கொளீஇக்