Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
மன்னவன் மடமகள் பின்னொழிந் திறக்கும்
ஏந்திள வனமுலை யெழில்வளைப் பணைத்தோள்
மாந்தளிர் மேனி மடமா னோக்கின்
ஆய்ந்த கோலத் தயிரா பதியெனும்
கூன்மட மகடனைக் கோமகன் குறுகி
யாவளிந் நங்கை யாதிவண் மெய்ப்பெயர்
காவலர் கொள்ளுங் காவினுள் வந்த
காரண மென்னை கருமமுண் டெனினும்
கூறினை செல்லிற் குற்றமில்லென
மாறடு குருசில் வேறிடை வினவ
அந்த ணாள னரும்பொரு ணசையின்
வந்தன னென்னும் வலிப்பினளாகி
இன்பங் கலந்த விந்நகர்க் கிறைவன்
தன்பெரு மாட்டி தலைப்பெருந் தேவி
சிதைவில் கற்பிற் சிவமதி யென்னும்
பேருடை மாதர்க் கோரிடம் பிறந்த
உதையை யோடை யென்னு மொண்டொடி
காசி யரசன் காதலி மற்றவள்
ஆசின்று பயந்த வணியிழைக் குறுமகள்
. மதுநாறு தெரியன் மகளிருட் பொலிந்த
பதுமா பதியெனப் பகர்ந்த பேரினள்
துன்னருஞ் சிறப்பிற் கன்னி தானும்
வயந்தக் கிழவற்கு நயந்துநகர் கொண்ட
விழவணி நாளகத் தழகணி காட்டி
எழுநாள் கழிந்த வழிநாட் காலை
வேதியர்க் கெல்லாம் வேண்டுவ கொடுக்கும்
போதல் வேண்டா பொருட்குறை வுண்டெனின்
ஏதமில்லையிவணி ராமினென்
றிந்நாட் டாரலி ரேனையர் போல்வீர்
எந்நாட் டெவ்வூ ரெக்கோத் திரத்தீர்
யாமு நும்மை யறியப் போமோ
வாய்மை யாக மறையா துரைமினென்
றேயர் குருசிலைத் தூய்மொழி வினவ
நன்றான் மற்றது கேளாய் நன்னுதல்
கண்டார் புகழுங் கலக்கமில் சிறப்பிற்
காந்தார மென்னு மாய்ந்த நாட்டகத்
தீண்டிய பல்புக ழிரத்தின புரத்துள்