தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   267


     

    மாண்ட வேள்வி மந்திர முத்தீச்
    சாண்டிய னென்னுஞ் சால்புடை யொழுக்கின்
    ஆய்ந்த நெஞ்சத் தந்தணன் மகனென்
    மாணக னென்பேன் மற்றிந் நாடு
    காண லுறலொடு காதலிற் போந்தனென்
    என்றது சொல்ல நன்றென விரும்பி
    ஆய்புக ழண்ணலை யறிந்தன ளாகிச்
    சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென்
    சேயிழைக் கூன்மகள் செவ்வனங் கூறிப்
    போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி
    அரும்பெறற் றோழரைப் பொருந்தலும் பொருக்கெனப்
    பகலிடம் விளக்கிய பருதியஞ் செல்வன்
    அகலிடம் வறுவி தாக வத்தத்
    துயர்வரை யுப்பாற் கதிர்கரந் தொளிப்ப
    ஆண்கட னகற லதுநோன் றொழுகுதல்
    மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்
    கற்புடை மகளிர் கடனெனக் காட்டி
    வினைக்கும் பொருட்கு நினைத்துநீத் துறையுநர்
    எல்லை கருதிய திதுவென மெல்லியற்
    பணைத்தோண் மகளிர்க்குப் பயிர்வன போல
    மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய
    பைந்தார் முல்லை வெண்போது நெகிழ
    வெறுக்கைச் செல்வம் வீசுத லாற்றாது
    மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல
    வாச மடக்கிய வாவிப் பன்மலர்
    மாசி லொள்ளொளி மணிக்கண் புதைப்பப்
    பெருமை பீடற நாடித் தெருமந்
    தொக்க லுறுதுய ரோப்புத லுள்ளிப்
    பக்கந் தீர்ந்த பரிசில ருந்தவாச்
    செறுமுகச் செல்வரிற் சேராது போகி
    உறுபொரு ளுள்ள துவப்ப வீசி
    வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்
    துரத்தகை யாளர் சுரத்துமுதற் சீறூர்
    எல்லுறு பொழுதிற் செல்ல லோம்பி
    மகிழ்பத மயின்றிசி னாங்கு மல்லிகை
    அவிழ்தா தூதி யளிதுயி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:56:00(இந்திய நேரம்)