அருள்மிகு வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் திருக்கோயில்
வரிச்சியூர் மலையின் கிழக்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் வலதுபுறம் கைகட்டிய நிலையில் அடியவர் ஒருவர் நின்ற நிலையிலும், இடதுபுறம் வாயிற்காவலர் ஒருவரும் உள்ளனர். முகப்பில் நந்தி அமைந்துள்ளது.
- பார்வை 270