அருள்மிகு கீழக்கடம்பூர் ருத்ரபதி திருக்கோயில்
இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கோயில் இருக்கலாம். பிற்காலச் சோழர் கலைப்பாணி நன்கு தெரிகிறது. தற்போது கூரைப்பகுதி வரை மட்டுமே காட்சியளிக்கிறது. தளங்கள் இடம் பெறவில்லை. எனவே எந்த பாணியில் கட்டப்பட்டது என்பதும், எத்தனை தளங்கள் உடையது என்பதும் அறியக்கூடவில்லை. இக்கோயிலில் தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், அர்த்தநாரி ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் இக்கோயிலின் தனிச்சிறப்பானது 63 நாயன்மார்களின் வரலாற்றினை சிற்பவடிவமாக பெற்றுத் திகழ்வதாகும். ஆனால் நாயன்மார் சிற்பம் தற்போது காணப்படவில்லை.
- பார்வை 897