அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
திருவாலீஸ்வரம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருவாலீஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கற்றளியாகும். இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். முழுவதும் கற்றளியாக அமைந்த இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் தற்போது இருந்து வருகிறது. கோயில் தற்காலத்தில் இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத் தளங்களில் இறைவனின் பல்வேறு வடிவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் தள வரிசை சிற்பங்களை நோக்குங்கால் முதலாம் பராந்த சோழனது புள்ளமங்கை கோயில் நினைவுக்கு வருகிறது.
- பார்வை 998