அருள்மிகு வேலூர் ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்
இக்கோயில் வேலூர் கோட்டையைப் போலவே கி.பி.1566-க்கு முன்பாக, வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்னபொம்மி நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டது. இம்மன்னன் மஹாமண்டலேச்வரர் திருமலையத் தேவருக்கும் மஹாராஜசதாசிவ தேவருக்கும் அவருக்குப்பின் ஸ்ரீரங்கதேவ மஹாராஜருக்கும் உட்பட்ட சிற்றரசாக வேலூர்ச் சீமையில் ஆண்டார். இக்கோயில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் அதனுடன் ஒருமித்த மகாமண்டபமும் கூடியது. மகாமண்டபத்து வடபுறம் நடராஜருக்குரிய சிறிய கோயில் அறையின் அடித்தளத்தில் நிலவறையொன்றுண்டு.
- பார்வை 1039