Primary tabs
-
கரகாட்டம்
கரகாட்டம் தமிழர்களின் மரபுசார் ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தைத் தலையில் வைத்தபடி, சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும்.