Primary tabs
-
பொய்க்கால் குதிரை ஆட்டம்
குதிரைக் கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல் பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் தஞ்சாவூரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.ஆணும் பெண்ணும் அரசர், அரசி போன்று வேடமிட்டு ஆடுவதுண்டு.
இது புரவியாட்டம், புரவி நாட்டியம், பொய்க்குதிரை ஆட்டம் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.பொய்யான குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு மரக்காலில் நின்று ஆடும் ஆட்டம் என்பதால் பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று அழைக்கப்படுகிறது.