தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்

தமிழ்

தமிழிசை ஆர்வலர்களுக்காகப் பன்னிரு திருமுறைகளில் தேவாரம், திருவாசகம் பாடல்களைக் கொண்ட சான்றிதழ்ப் பயிற்சியாக மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது இரண்டு நிலைகளில் கீழ்க்காணுமாறு பாடத்திட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • MPB0 அடிப்படைநிலை
  • MPA0 மேல்நிலை

1. சேர்க்கைத் தகுதி

  • அடிப்படை நிலையில் சேருவதற்கு முன்தகுதி தேவை இல்லை. ஆனால் குறைந்தபட்ச வயது வரம்பு பின்வருமாறு:
வ. எண் பாடத்திட்டம் தகுதி
1. அடிப்படைநிலை 10 வயது நிறைவு
2. மேல்நிலை 15 வயது நிறைவு (அல்லது) அடிப்படைநிலையில் சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

2. மாணவர் பதிவு

மாணவராகச் சேர இங்குச் சுட்டவும்

மாணவர் விவரம் காண இங்குச் சுட்டவும்

3. கால அளவு

வ. எண் பாடத்திட்டம் குறைந்தபட்சம்/ அதிகபட்சம் கால அளவு வகுப்புகள்
1. அடிப்படைநிலை 3/6 மாதம் 24 வகுப்புகள்
2. மேல்நிலை 4/8 மாதம் 32 வகுப்புகள்

4. பாடத்திட்டமும் மதிப்பீட்டு முறையும்

மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சிக்கான பாடத்திட்டமும் மதிப்பீட்டு முறையும் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன :

  • பாடத்திட்டத்தைக் காண இங்கே சுட்டுக.
  • மதிப்பீட்டு முறை
மதிப்பீட்டு முறை
தாள் குறியீடு நிலைகள் படிக்க வேண்டிய கால அளவு (திங்கள்) வாய்மொழித்தேர்வு (மதிப்பெண்) இணையவழித் தேர்வு (மதிப்பெண்) மொத்த மதிப்பு மதிப்பு விழுக்காடு
MPB0 அடிப்படை நிலை 3 75 25 100 100%
MPA0 மேல் நிலை 5 75 25 100 100%

தேர்வு முறை

மரபுவழிப் பண்ணிசைப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தில் பயில விரும்புவோர் அனைவரும் தேர்வுகளில் பங்கு பெற வேண்டிய கட்டாயம் இல்லை. தகுதிச் சான்றிதழ் வேண்டுவோர் மட்டும் தேர்வுகளில் பங்கு பெறலாம்.

ஒவ்வொரு நிலைக்கும் இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும்.

அ)  வாய்மொழித் தேர்வு

ஆ) இணையவழித் தேர்வு

5.1 தேர்வு அமைப்பு

 

அடிப்படை மற்றும் மேல்நிலைக்கு இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.

  • வாய்மொழித் தேர்வு

பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பதிகங்களைப் பாடும் வகையிலும், பதிகம் தொடர்பான நேரடி வினாக்களுக்கு விடை கூறும் வகையிலும் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • இணையவழித்தேர்வு

இணையவழித் தேர்வு எழுதுபவர்களுக்கான வினாக்களை வினாவங்கியிலிருந்து கணினியே தொகுத்து வழங்கும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நிறைவடைந்தபின் விடைகளைக் கணினியே திருத்தி மதிப்பெண்கள் வழங்கும்.

5.2 தேர்வு நடைமுறைகள்

  • மாணவர்கள் தேர்வுகளை அவர்களின் தொடர்பு மையங்கள்வழி எழுத வேண்டும்.
  • தேர்வுத் தொடர்பான அனைத்துப் பணிகளும் அந்தந்த தொடர்புமையங்களின் நிர்வாகிகளால் ஒருங்கிணைக்கப்படும்.
  • தேர்வுகள் ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
  • தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களைக் காண இங்கே சுட்டுக.

5.3 வினாத்தாள் அமைப்பு

அடிப்படை நிலை மற்றும் மேல்நிலைக்கான வினாத்தாள்களின் அமைப்பு முறைகளைக் (Blue Print) காண இங்கே சுட்டுக.

கட்டண விவரம்

அடிப்படை நிலை மற்றும் மேல்நிலைப் பாடங்களுக்கான தேர்வுக் கட்டண விவரம் அறிவதற்கு இங்கே சுட்டுக.

தேர்ச்சியும், தகுதிச் சான்றிதழும்

இப்பயிற்சிக்கான படிப்பில் தேர்ச்சிப் பெற, வாய்மொழித் தேர்விலும் இணையவழித் தேர்விலும் சேர்ந்து எடுக்கும் சராசரி மதிப்பெண்கள் குறைந்தது 40 விழுக்காடு இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-08-2025 17:48:39(இந்திய நேரம்)