முகப்பு |
பனை (பெண்ணை) |
38. நெய்தல் |
வேட்டம் பொய்யாது வலைவளம்சிறப்ப, |
||
பாட்டம் பொய்யாது பரதவர் பகர, |
||
இரும் பனந் தீம் பிழி உண்போர் மகிழும் |
||
ஆர் கலி யாணர்த்துஆயினும், தேர் கெழு |
||
5 |
மெல்லம் புலம்பன் பிரியின், புல்லெனப் |
|
புலம்பு ஆகின்றே-தோழி! கலங்கு நீர்க் |
||
கழி சூழ் படப்பைக் காண்டவாயில், |
||
ஒலி காவோலை முள் மிடை வேலி, |
||
பெண்ணை இவரும் ஆங்கண் |
||
10 |
வெண் மணற் படப்பை, எம் அழுங்கல் ஊரே. | உரை |
தலைவி வன்புறை எதிர்அழிந்து சொல்லியது.-உலோச்சனார்
|
90. மருதம் |
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், |
||
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, |
||
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த |
||
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு |
||
5 |
வாடா மாலை துயல்வர, ஓடி, |
|
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் |
||
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், |
||
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, |
||
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் |
||
10 |
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
|
நயன் இல் மாக்களொடு கெழீஇ, |
||
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! | உரை | |
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.-அஞ்சில் அஞ்சியார்
|
123. நெய்தல் |
உரையாய்-வாழி, தோழி!-இருங் கழி |
||
இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி |
||
வாங்கு மடற் குடம்பை, தூங்கு இருள் துவன்றும் |
||
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை, |
||
5 |
கானல் ஆயமொடு காலைக் குற்ற |
|
கள் கமழ் அலர தண் நறுங் காவி |
||
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ, |
||
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி, |
||
புலவுத் திரை உதைத்த கொடுந் தாட் கண்டல் |
||
10 |
சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் |
|
சிறு விளையாடலும் அழுங்கி, |
||
நினைக்குறு பெருந் துயரம் ஆகிய நோயே. | உரை | |
தலைவன்சிறைப்புறத்தானாக, தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.- காஞ்சிப் புலவனார்
|
126. பாலை |
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் |
||
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி |
||
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் |
||
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி, |
||
5 |
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம் |
|
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம், |
||
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின், |
||
இளமையின் சிறந்த வளமையும் இல்லை; |
||
இளமை கழிந்த பின்றை, வளமை |
||
10 |
காமம் தருதலும் இன்றே; அதனால், |
|
நில்லாப் பொருட் பிணிச் சேறி; |
||
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே! | உரை | |
பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.
|
135. நெய்தல் |
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
||
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
||
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
||
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
||
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
||
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
||
வால் உளைப் பொலிந்த, புரவித் |
||
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. | உரை | |
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|
199. நெய்தல் |
ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை |
||
வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு, |
||
நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி, |
||
அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து, |
||
5 |
உளெனே-வாழி, தோழி! வளை நீர்க் |
|
கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர் |
||
வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி, |
||
வளி பொரக் கற்றை தாஅய், நளி சுடர், |
||
நீல் நிற விசும்பின் மீனொடு புரைய, |
||
10 |
பைபய இமைக்கும் துறைவன் |
|
மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே! | உரை | |
வன்புறை எதிரழிந்தது.-பேரி சாத்தனார்
|
218. நெய்தல் |
ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே; |
||
எல்லியும், பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே; |
||
வாவலும் வயின்தொறும் பறக்கும்; சேவலும் |
||
நகை வாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்; |
||
5 |
ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் |
|
கூறிய பருவம் கழிந்தன்று; பாரிய |
||
பராரை வேம்பின் படு சினை இருந்த |
||
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்; |
||
ஆனா நோய் அட வருந்தி, இன்னும் |
||
10 |
தமியேன் கேட்குவென் கொல்லோ, |
|
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே? | உரை | |
வரைவிடை மெலிந்த தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.கிடங்கில் - காவிதிக் கீரங்கண்ணனார்
|
303. நெய்தல் |
ஒலி அவிந்து அடங்கி, யாமம் |
||
நள்ளென, |
||
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே; |
||
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை |
||
5 |
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத் |
|
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும், |
||
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய், |
||
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது |
||
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல் |
||
10 |
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல் |
|
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி, |
||
கடு முரண் எறி சுறா வழங்கும் |
||
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே. | உரை | |
வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
323. நெய்தல் |
ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணை |
||
நடுவணதுவேதெய்ய-மடவரல் |
||
ஆயமும் யானும் அறியாது அவணம் |
||
ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின் |
||
5 |
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை |
|
நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்: |
||
புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்த |
||
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி, |
||
வண்டு இமிர் இன் இசை கறங்க, திண் தேர்த் |
||
10 |
தெரி மணி கேட்டலும் அரிதே; |
|
வரும் ஆறு ஈது; அவண் மறவாதீமே. | உரை | |
தோழி இரவுக்குறி நேர்ந்தது.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
335. நெய்தல் |
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் |
||
பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே; |
||
ஒலி சிறந்து ஓதமும் பெயரும்; மலி புனற் |
||
பல் பூங் கானல் முள் இலைத் தாழை |
||
5 |
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ, |
|
வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு |
||
மை இரும் பனைமிசைப் பைதல உயவும் |
||
அன்றிலும் என்புற நரலும்; அன்றி, |
||
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் |
||
10 |
யாமம் உய்யாமை நின்றன்று; |
|
காமம் பெரிதே; களைஞரோ இலரே! | உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி மிதூர்ந்து தலைமகள் சொல்லியது.- வெள்ளிவீதியார்
|
338. நெய்தல் |
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே; |
||
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர் |
||
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா; |
||
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை; |
||
5 |
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள |
||
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு, |
||
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய |
||
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி, |
||
10 |
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, |
|
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் |
||
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? | உரை | |
ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
|
354. நெய்தல் |
தான் அது பொறுத்தல் யாவது-கானல் |
||
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை |
||
கானல் நண்ணிய வார் மணல் முன்றில், |
||
5 |
எல்லி அன்ன இருள் நிறப் புன்னை |
|
நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த |
||
தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின், |
||
கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு |
||
நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் |
||
10 |
அளம் போகு ஆகுலம் கடுப்ப, |
|
கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே? | உரை | |
தோழியால் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது; மனைவயின் தோழியைத் தலைமகன் புகழ்ந்தாற்கு மறுத்துச் சொல்லியதூஉம் ஆம்.- உலோச்சனார்
|
392. நெய்தல் |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
||
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
||
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
||
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
||
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
||
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
||
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
||
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
||
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. | உரை | |
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|