முகப்பு |
குரங்கு (மந்தி, கடுவன்) |
22. குறிஞ்சி |
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
||
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
||
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
||
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
||
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
||
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
||
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
||
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
||
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. | உரை | |
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! | உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|
95. குறிஞ்சி |
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க, |
||
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று, |
||
அதவத் தீம் கனி அன்ன செம் முகத் |
||
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க, |
||
5 |
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, |
|
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் |
||
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்; |
||
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி; |
||
கொடிச்சி கையகத்ததுவே, பிறர் |
||
10 |
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. | உரை |
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது.-கோட்டம்பலவனார்
|
151. குறிஞ்சி |
நல் நுதல் பசப்பினும், பெருந் தோள் நெகிழினும், |
||
கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் |
||
செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை |
||
கல் மிசை அருவியின் கழூஉஞ் சாரல் |
||
5 |
வாரற்கதில்ல-தோழி!-கடுவன், |
|
முறி ஆர் பெருங் கிளை அறிதல் அஞ்சி, |
||
கறி வளர் அடுக்கத்து, களவினில் புணர்ந்த |
||
செம் முக மந்தி செய்குறி, கருங் கால் |
||
பொன் இணர் வேங்கைப் பூஞ் சினைச் செலீஇயர், |
||
10 |
குண்டு நீர் நெடுஞ் சுனை நோக்கிக் கவிழ்ந்து, தன் |
|
புன் தலைப் பாறு மயிர் திருத்தும் |
||
குன்ற நாடன் இரவினானே! | உரை | |
இரவுக்குறிச்சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.-இளநாகனார்
|
168. குறிஞ்சி |
சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் |
||
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், |
||
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் |
||
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் |
||
5 |
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
|
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- |
||
நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், |
||
அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், |
||
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக |
||
10 |
ஆரம் கமழும் மார்பினை, |
|
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? | உரை | |
தோழி இரவுக்குறி மறுத்தது.
|
194. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி! கைம்மாறு |
||
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க் |
||
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும், |
||
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை, |
||
5 |
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத் |
|
தனி நிலை இதணம் புலம்பப் போகி, |
||
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை, |
||
குன்ற வெற்பனொடு நாம் விளையாட, |
||
இரும்பு கவர்கொண்ட ஏனற் |
||
10 |
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே? | உரை |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
233. குறிஞ்சி |
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று |
||
மட மா மந்தி மாணா வன் பறழ், |
||
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் |
||
பெருங் கல் நாடனை அருளினை ஆயின், |
||
5 |
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
|
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற |
||
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, |
||
ஆன்றோர் செல் நெறி வழாஅச் |
||
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்
|
251. குறிஞ்சி |
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண், |
||
பிணி முதல் அரைய பெருங் கல் வாழைக் |
||
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் |
||
நல் மலை நாடனை நயவா, யாம், அவன் |
||
5 |
நனி பேர் அன்பின், நின் குரல் ஓப்பி, |
|
நின் புறங்காத்தலும் காண்போய், நீ? என் |
||
தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழிய, |
||
பலி பெறு கடவுட் பேணி, கலி சிறந்து, |
||
நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும்; |
||
10 |
தோடு இடம் கோடாய், கிளர்ந்து, |
|
நீடினை விளைமோ! வாழிய, தினையே! | உரை | |
சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரைப் பெருமருதிள நாகனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. | உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
334. குறிஞ்சி |
கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளை |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி, |
||
ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கை |
||
வெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப, |
||
5 |
கலையொடு திளைக்கும் வரைஅக நாடன்- |
|
மாரி நின்ற ஆர் இருள் நடு நாள், |
||
அருவி அடுக்கத்து, ஒரு வேல் ஏந்தி; |
||
மின்னு வசி விளக்கத்து வருமெனின், |
||
என்னோ-தோழி!-நம் இன் உயிர் நிலையே? | உரை | |
தோழி இரவுக்குறி முகம் புக்கது.
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
காமம் கனிவதுஆயினும், யாமத்து |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. | உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! | உரை | |
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|
379. குறிஞ்சி |
புன் தலை மந்தி கல்லா வன் பறழ் |
||
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது, |
||
எரி அகைந்தன்ன வீ ததை இணர |
||
வேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கைய |
||
5 |
தேம் பெய் தீம் பால் வௌவலின், கொடிச்சி |
|
எழுது எழில் சிதைய அழுத கண்ணே, |
||
தேர் வண் சோழர் குடந்தைவாயில் |
||
மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த, |
||
பெயல் உறு நீலம் போன்றன விரலே, |
||
10 |
பாஅய் அவ் வயிறு அலைத்தலின், ஆனாது, |
|
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் |
||
ஓங்கு இருஞ் சிலம்பில் பூத்த |
||
காந்தள்அம் கொழு முகை போன்றன, சிவந்தே. | உரை | |
தோழி தலைமகற்குத் தலைமகளை மடமை கூறியது; காப்புக் கைம்மிக்க காலத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம்.-குடவாயிற் கீரத்தனார்
|