Primary tabs
-
பாடம் - 4
A03114 தமிழக அயலகத் தொடர்புகள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
பண்டைய தமிழர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது பற்றி விளக்குகின்றது. பழந்தமிழர்கள் அவர்களுடன் எவ்விதமான தொடர்பினை மேற்கொண்டனர் என்பது பற்றியும், அத்தொடர்பினால் அவர்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பது பற்றியும் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- பழந்தமிழர் மேலை நாடுகளாகிய கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, பாபிலோனியா போன்ற நாட்டாருடன் வாணிபத் தொடர்பு மேற்கொண்டு ஏலம், இலவங்கம், மிளகு போன்ற நறுமணப் பொருள்களை ஏற்றுமதி செய்ததைப் படித்து உணரலாம்.
- கிழக்கு ஆசிய நாட்டாருடன் வாணிபத் தொடர்பு மேற்கொண்டதையும் அதனால் சீனாவில் இருந்து இறக்குமதியான பொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
- வட இந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பு பற்றியும், அத்தொடர்பினால் மொழியிலும், சமயத்திலும், சமூக வாழ்விலும் பல்வேறு மாற்றங்களைப் பழந்தமிழகம் சந்தித்தது பற்றியும் நன்கு அறிந்து கொள்ளலாம்
- கிரந்த எழுத்துகள், பிராகிருதம் போன்றவை எதனால் ஏற்பட்டன என்பது பற்றியும் படித்து உணரலாம்.