Primary tabs
-
பாடம் - 5
A03115 சங்க கால மன்னர்கள்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
சங்க காலத்தில் தமிழகம் மூன்று பிரிவாகப் பிரிந்து மூவேந்தர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது என்பது பற்றிக் கூறுகிறது. அம்மூவேந்தர்களின் அரசாட்சிக்கு இடையில் பல குறுநில மன்னர்களும் தமிழகத்தை ஆட்சி புரிந்து வந்தனர் என்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- இப்பாடத்தின் மூலம் தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்றும், அவர்களுள் பெரும் பெயர் பெற்ற மன்னர்கள் என்னென்ன நன்மைகள் செய்தார்கள் என்றும், எங்கெல்லாம் போர் செய்தார்கள் என்றும் படித்து உணரலாம்.
- சோழ நாடானது யாருடைய ஆட்சிக் காலத்தில் பெருமை பெற்று விளங்கியது என்பது பற்றியும், யாரால் வீழ்ச்சியுற்றது என்பது பற்றியும் படித்துப் புரிந்து கொள்ளலாம்.
- பாண்டிய மன்னருள் தலைசிறந்து விளங்கியவன் யார் என்பதையும், பாண்டிய மன்னருள் பலர் நன்கு தமிழ்ப் புலமை பெற்றுச் செய்யுள் இயற்றியுள்ளனர் என்பதையும் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
- தொல்காப்பியம், திருக்குறள் போன்ற புகழ்பெற்ற தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பாண்டியர் அரசவையில்தான் அரங்கேற்றப்பட்டன என்றும் தெரிந்து கொள்ளலாம்.