தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தமிழகத்தின் இயற்கை அமைப்பு

  • பாடம் - 1

    A03111 தமிழகத்தின் இயற்கை அமைப்பு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழர்களின் வாழ்வு மையமாகக் காலம் காலமாய் இருந்துவரும் தமிழக நிலப்பரப்பின் இயற்கை அமைப்பினை விரிவாக விளக்குகிறது.

    பழங்காலம் முதற்கொண்டு தற்காலம் வரையிலும், தமிழகத்தின் எல்லைகளில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களைத் தக்க சான்றுகள் காட்டி விளக்குகிறது.  தமிழகத்தின் இயற்கை வளத்திற்கு ஆதாரமாக உள்ள மலைகள், ஆறுகள், கடல்கள் போன்றவற்றை விளக்குகிறது.  தமிழர்கள் தொன்றுதொட்டு மேற்கொண்டுவரும் வேளாண்மை, மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், உப்பு விளைத்தல் போன்ற தொழில்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழகத்தின் நிலப்பரப்பு பழங்காலத்தில் எந்த அளவு பரந்துபட்டு அமைந்திருந்தது என்பது பற்றியும், காலம் செல்லச் செல்ல அது எந்த அளவு சுருங்கி அமைந்தது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    • சங்க காலத்தில் சேர நாட்டில் வழங்கிய தமிழே இன்று கேரள மாநிலத்தில் மலையாள மொழியாக வழங்கி வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • தமிழகத்தின் இயற்கை வளத்திற்குக் காரணமாக உள்ள மலைகள், ஆறுகள், கடல்கள் போன்றவற்றின் அமைப்பினை அறிந்து கொள்ளலாம்.
    • தமிழகத்தின் தொழில் வளத்திற்குக் காரணமாக அமைந்துள்ள பல்வேறு தொழில்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 22-07-2017 12:51:12(இந்திய நேரம்)