தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

  • பாடம் - 3

    A03113 வரலாற்றிற்கு முந்தைய தமிழகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    பழந்தமிழகப் பின்னணி, பழந்தமிழகப் புவியியல் கூறுகள், நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் ஆகியவற்றைத் தக்க சான்றுகளுடன் விளக்குகிறது. தமிழர்கள் பிற இனத்தவரின் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்று அதனால் தம் தனித்தன்மையை இழந்து விடாமல் அன்றுமுதல் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் விளக்குகிறது.

     

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • பழந்தமிழகப் பின்னணி என்ற தலைப்பில் இலெமூரியா என்னும் கண்டம் இருந்து பின்பு அழிந்ததையும், தமிழகம் தனிமைப்பட்டு இருந்ததையும், பழந்தமிழகத்தின் பிரிவுகளையும் அறியலாம்.
    • பழந்தமிழகப் புவியியல் கூறுகள் என்ற தலைப்பில் பழந்தமிழகத்தின் புவியியல் அமைப்பு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரிக்கப்பட்டது எவ்வாறு என்பதனை அறியலாம்.
    • நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் என்னும் தலைப்பில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம் என ஒன்றன்பின் ஒன்றாக விளக்கப்பட்ட காலப் பகுதிகளில் தமிழகம் இருந்த நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:20:59(இந்திய நேரம்)