Primary tabs
3.5 தொகுப்புரை
இப்பாடத்தில் வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் எவ்வாறு இருந்து எவ்வாறாக மாறியது என்பது விளக்கப்பட்டது.
இலெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் எவ்வாறு அமையப் பெற்றிருந்தது என்பதனை அறிந்தீர்கள். மேலும் பழந்தமிழகத்தின் பிரிவுகள் பற்றியும் அறிந்தீர்கள்.
தமிழகத்தின் புவியியல் அமைப்பைப் பற்றியும், சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் நிலப்பரப்பை எவ்வாறு எல்லாம் பிரித்துப் பார்த்தனர் என்பது பற்றியும் படித்து உணர்ந்து கொண்டீர்கள்.
பாலை என்ற ஒரு நிலப்பரப்பு இல்லை என்றும், குறிஞ்சி, முல்லை நிலப்பரப்புகள் வறட்சியை எய்தும்போது பாலை எனப் பாகுபடுத்திப் பார்த்தனர் பழந்தமிழர் என்றும் அறிந்து கொண்டீர்கள்.
இவற்றையெல்லாம் விட, பழந்தமிழர் அறிவில் வளர்ச்சியுற்று இருந்தனர் என்றும், நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் இருந்து வந்தது என்பது பற்றியும் படித்து உணர்ந்தீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் கலாச்சார அடிப்படையில் எந்த எந்த நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது ?